News August 6, 2025

RR அணியிலேயே தொடரும் சஞ்சு

image

RR அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் சஞ்சு சாம்சனை தோனிக்கு மாற்றாக அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட அடுத்த சீசனில் சிஎஸ்கேவில் சஞ்சு இணைவது உறுதி என அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சஞ்சு சாம்சனிடம் சமாதானம் செய்யப்பட்டு விட்டதாகவும், RR அணியிலேயே தொடருவார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 7, 2025

டிரம்புக்கு மறைமுக வார்னிங் கொடுத்த PM மோடி

image

இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலனே முதன்மையானது என PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியர்களின் நலனின் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது எனவும் அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். புதிய வரிவிதிப்பால் டிரம்ப், இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், அவருக்கு PM மோடி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

News August 7, 2025

SSI கொலை வழக்கில் என்கவுன்டர்.. Roundup ஸ்டோரி

image

மடத்துக்குளம் MLA மகேந்திரனின் தோட்டத்தில் மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை விலக்கி விடச் சென்ற SSI சண்முகவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மூர்த்தி, தங்கபாண்டி இருவரும் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கும் முயற்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் <<17327420>>சுட்டு கொல்லப்பட்டதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது.

News August 7, 2025

சர்ச்சையாகும் ஸ்டாலின், உதயநிதி பதிவு

image

வாக்கு அரசியலுக்காக ‘ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம்’ என்ற கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து ‘தனிச்சட்டம்’ குறித்து வலியுறுத்தினர். அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல், கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடல்நலம் குறித்து விசாரித்ததாக ஸ்டாலின், <>உதயநிதி <<>> பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது.

error: Content is protected !!