News April 29, 2024
உலகக்கோப்பை டி20 அணியில் சஞ்சு சாம்சன்?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 77 சராசரி, 161 ஸ்டிரைக் ரேட்டுடன் 385 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதமும் அடங்கும். மேலும், இந்திய அணியின் முதல் 4 இடங்களில் விளையாட ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார் ஆகியோர் தேர்வாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News August 27, 2025
மூலிகை: பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானம் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
News August 27, 2025
Engagement முடிஞ்சாச்சு.. காதலரை கரம்பிடிக்கும் நடிகை!

உலக அளவில் பிரபலமான பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான டெய்லர் ஸ்விஃப்ட்க்கும், டிராவிஸ் கெல்ஸுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது நிச்சயதார்த்த போட்டோஸை டெயிலர் ஸ்விஃப்ட் வெளியிட, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1989, Folklore போன்ற ஆல்பங்களின் மூலம் உலகளவில் பிரபலமடைந்த டெயிலர் ஸ்விஃப்ட் The Lorax, Amsterdam போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
News August 27, 2025
பிஹார் புறப்பட்டார் CM ஸ்டாலின்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி, பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், இதில் பங்கேற்பதற்காக CM ஸ்டாலின் பிஹார் புறப்பட்டுள்ளார். சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு யாத்திரையில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2.40 மணிக்கு CM சென்னை திரும்புகிறார்.