News June 27, 2024
சஞ்சய் சிங் இடைநீக்கம் ரத்து

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 14இல் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவர் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது இடைநீக்கத்தை ரத்து செய்ததற்கு, ஜன்தீப் தன்கருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், விரைவில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளதாகவும் சஞ்சய் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: இன்பதுரை

டிட்வா புயல் & மழை வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக MP இன்பதுரை ராஜ்யசபாவில் குற்றம் சாட்டினார். விவசாய நிலங்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே வாய்க்கால்களை தூர்வார EPS பலமுறை வலியுறுத்தியும், அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது என சாடிய அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை உடனே கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
News December 3, 2025
கனமழை கொட்டும்.. 17 மாவட்டங்களுக்கு அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நீடிப்பதால், மழை தொடர்ந்து பெய்யும் என்றும் IMD கூறியுள்ளது.
News December 3, 2025
BREAKING: ஓய்வை அறிவித்தார் மோஹித் சர்மா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக மொத்தமாக 34 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 37 விக்கெட்களை எடுத்துள்ளார். CSK-வுக்கு நட்சத்திர வீரராக திகழ்ந்த மோஹித், IPL-ல் ஒட்டுமொத்தமாக 134 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.


