News December 12, 2024
தோனியை புகழ்ந்த சஞ்சய் கோயங்கா!

தோனியை போன்றதொரு கேப்டனை பார்த்தது இல்லை என LSG நிறுவனர் சஞ்சய் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், காலத்திற்கு ஏற்ப அவர் தன்னை தயார் செய்து வருவதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பேபி பவுலராக இருந்த பத்திரனாவை, தோனி எங்கு பார்த்து கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இன்று அவரை மேட்ச் வின்னராக மாற்றியுள்ளார்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News September 1, 2025
கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள் கூறியதால் OPS இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் OPS தரப்பு 10 சீட்கள் வரை கேட்பதாகவும், கூட்டணி உறுதியான பின் மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.
News September 1, 2025
மெகா கூட்டணிக்கான ப்ளானில் EPS.. விரைவில் அறிவிப்பு?

அதிமுக கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் இம்மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த EPS திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட விருந்து கொடுக்கும் ப்ளானில் உள்ள EPS, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளையும் அங்கு அழைத்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனித்தனி டீம் அமைத்துள்ளாராம். உருவாகுமா மெகா கூட்டணி?