News April 2, 2025
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வதென்ன?

தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் அல்லது அதற்கான முயற்சியில் இருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 113ஆவது பிரிவின் 6ஆவது உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. அதேபோல், தேர்தலையொட்டி, ஏப்.7 முதல் 10 வரை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News April 2, 2026
₹48,000 சம்பளம்… 1,000 பணியிடங்கள் BANK JOBS

பஞ்சாப் & சிந்த் வங்கியில் காலியாகவுள்ள 1,000 உள்ளூர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: டிகிரி + வங்கி & நிதி நிறுவனங்களில் ஒன்றரை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க <
News April 2, 2026
ராகவ் சத்தாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆம் ஆத்மி

AAP ராஜ்யசபா துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டுள்ளார். செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 28 நாள்கள் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது, ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு, ஏர்போர்ட்களில் உணவு பொருள்கள் அதிக விலைக்கு விற்பது போன்ற பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசி மக்களின் கவனத்தை ராகவ் ஈர்த்திருந்தார். ஆனால் கட்சி தலைமைக்கு அவர் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


