News December 5, 2024
சாம்சங் விவகாரம்: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமையில்லை என சாம்சங் நிறுவனம் வாதாடிய நிலையில், பல நிறுவனங்களின் பெயரில் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக CITU எதிர்வாதம் வைத்தது. இரு தரப்பையும் கேட்ட நீதிபதி, பதிவுத்துறைக்கு ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Similar News
News December 28, 2025
காந்தியை அவமதிக்கும் பாஜக: காங்கிரஸ்

MGNREGA திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள VB G-RAM G திட்டத்திற்கு எதிராக ஜன.5-ல் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. MNREGA என்பது வெறும் திட்டமல்ல, அது இந்திய அரசியலமைப்பு வழங்கிய வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். திட்டத்தின் பெயரை மாற்றியது காந்தியை அவமதிக்கும் செயல் என்றும், இதனால் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News December 28, 2025
பிக்பாஸ் எவிக்ஷனில் ட்விஸ்ட்.. ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸில் இந்த வாரம் வீட்டைவிட்டு இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்த வாக்குகளை பெற்றதால் அமித்தை தொடர்ந்து கனியும் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். டாப் 5 வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கனி, எலிமினேட் ஆகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுபிக்ஷா, சபரியை விட கனி குறைவான வாக்குகளை பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க..
News December 28, 2025
டிசம்பர் 28: வரலாற்றில் இன்று

*1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம் *1932 – தொழிலதிபர் திருபாய் அம்பானி பிறந்தநாள் *1937 – தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் *1947 – எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்தநாள் *1952 – அரசியல்வாதி அருண் ஜெட்லி பிறந்தநாள் *1964 – அரசியல்வாதி ஜி.கே.வாசன் பிறந்தநாள்


