News January 23, 2025

சாம்சனுக்கு ஆபத்து: தந்தை குற்றச்சாட்டு

image

சஞ்சு சாம்சனுக்கு எதிராக கேரள கிரிக்கெட் சங்கத்தில் மிகப்பெரிய சதி நடந்து வருவதாக அவரது தந்தை விஸ்வநாத் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளாகவே பிரச்னையை எதிர்கொண்டு வருவதாகவும், அதற்கான காரணம் தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவில் இருந்து தங்கள் குடும்பம் வெளியேறவே இத்தகைய சதி நடப்பதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News October 30, 2025

33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

image

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.

News October 30, 2025

இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

image

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News October 30, 2025

சொந்த நாடு திரும்ப ஆசைப்படும் ஷேக் ஹசீனா

image

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!