News April 3, 2025
ஆளை விடுங்கடா சாமி: சாம் கதறல்

ChatGPT-யின் Ghibli ஸ்டைல் போட்டோக்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. கோடிக்கணக்கானோர் தங்களது அனிமேட்டட் வெர்ஷன் போட்டோக்களை ChatGPT-யில் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். இப்படி பல கோடி பேர் ஒரே நேரத்தில் உருவாக்குவதால் தனது டீமின் தூக்கம் போச்சு என ChatGPT-யின் ஓனர் சாம் ஆல்ட்மேன் கதறியுள்ளார். கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன் ப்ளீஸ் எனவும் அவர் தனது X பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 20, 2025
திருமணமான பெண்ணுடன் உறவு பலாத்காரம் ஆகாது: HC

திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் ஆகாது என்று கேரள HC தெரிவித்துள்ளது. கணவர், 2 குழந்தைகள் இருந்தபோதே வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவர், கணவர் இறந்த பிறகும் தொடர்பில் இருந்துள்ளார். தற்போது அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால், பலாத்கார வழக்கு தொடர்ந்த நிலையில், கோர்ட் இவ்வாறு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News November 20, 2025
நகைக் கடன்… மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் <<18334761>>1 கிராம் தங்கத்துக்கு ₹7,000<<>> கடன் வழங்கும் நடைமுறை நவ.17 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு, ஏப்ரல் – அக்டோபர் வரை 42 லட்சம் பேருக்கு சுமார் ₹45,000 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தற்போது, நகைக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் லட்சக்கணக்கானோருக்கு பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
நல்லா சாப்பிட்டாலும் குழந்தை ஒல்லியாவே இருக்கா?

குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடிவிட்டு கையை முறையாக கழுவாமல் உணவு சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் வயிற்றுக்குள் கிருமிகள் ஈஸியாக நுழையும். இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகி அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடலில் ஒட்டாமல் போகலாம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். அல்லது தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கவைக்கலாம். SHARE.


