News April 29, 2025
அதே மணம்.. பூஜா ஹெக்டே கிளாஸிக் லுக்

சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
Similar News
News November 19, 2025
Sports Roundup: SA அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு

*இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு. *முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. *வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. *100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெறவுள்ளார்.
News November 19, 2025
கள்ளக்குறிச்சி: ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட சடலம்!

ஐவதக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐவதுகுடியிலிருந்து சேலம் வரை செல்லும் ரயில்களில் யாசகம் எடுத்து வருகின்றார்.இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர். இவர் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையம் அருகே நேற்று (நவ.18) இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடலை கைப்பற்றி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
News November 19, 2025
தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு குறைபாடுகள்: RTI-ல் தகவல்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது RTI-ல் கிடைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது. ரயில் மோதலை தவிர்க்கும் கவாச் அமைப்பு, 5084 கி.மீ தூரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய நிலையில், 1984 கி.மீ தூரத்திற்கு மட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் தெற்கு ரயில்வேயில் 492 ரயில் நிலையங்களில் 250 இடங்களில் மட்டுமே மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.


