News August 27, 2024
ஆகஸ்ட் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் Ex CM சம்பாய் சோரன், ஆக.30இல் பாஜகவில் இணைகிறார். இது தொடர்பாக Union Min., அமித்ஷாவுடன், சம்பாய் சந்தித்த Photoவை, அசாம் CM ஹிமந்தா பிஸ்வா Xஇல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ED வழக்கில் ஜார்க்கண்ட் CM ஹேமந்த் கைதானதால், சம்பாய் இடைக்கால முதல்வரானார். பிறகு ஜாமினில் அவர் வெளிவந்து மீண்டும் CM ஆனதால், சம்பாய் அதிருப்தி அடைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகினார்.
Similar News
News November 20, 2025
தாயின் depression குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்குமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அது குழந்தைக்கு பாதிப்பை எற்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தாயின் மன அழுத்தத்தினால் குழந்தையின் பாலினத்திற்கும் தொடர்புள்ளதாக நியூயார்க்கில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிக மன அழுத்தம் இருந்தால் பெண் குழந்தையும், அதுவே குறைவாக இருந்தா ஆண் குழந்தையும் பிறக்கும் என கூறப்படுகிறது.
News November 20, 2025
Delhi Blast: அல்-ஃபலாஹ் பல்கலையில் 10 பேர் மிஸ்ஸிங்

டெல்லி குண்டுவெடிப்புக்கு அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திற்கும் பல தொடர்புகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பல்கலை.,யை சேர்ந்த 10 பேர் காணாமல் போயுள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் 3 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. செல்போன்கள் சுவிட்ச் அஃபில் உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
News November 20, 2025
வரலாற்றில் இன்று

1750 – மைசூர் பேரரசர் திப்பு சுல்தான் பிறந்த தினம்.
1910 – புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் மறைந்த தினம்.
1950 – இசையமைப்பாளர் தேவா பிறந்த தினம்.
1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐ. நா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1980 – நடிகை ஷாலினி பிறந்தநாள்.
1985 – மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 வெளியானது.


