News August 26, 2025
இதயத்தை கிள்ளும் சமந்தாவின் கிளிக்ஸ்!

விவாகரத்து, உடல் நல பிரச்சனைகள் என பல தடைகள் இருந்தாலும், அதை தாண்டி சிங்கப் பெண்ணாக வீரநடை போட்டு வருகிறார் சமந்தா. வெப்சீரிஸ், படங்கள் என மீண்டும் சமந்தா பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. மேலே இணைக்கப்பட்டுள்ள சமந்தாவின் போட்டோக்களை நீங்களும் கண்டு மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த சமந்தாவின் படம் என்ன?
Similar News
News August 26, 2025
காலை 11 மணிக்கு மேல் வெளியே வராதீங்க.. அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல மக்கள் தயங்குகின்றனர். குறிப்பாக, இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் IMD எச்சரித்துள்ளது. எனவே, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
News August 26, 2025
RECIPE: சத்துள்ள குதிரைவாலி தக்காளி தோசை!

◆குதிரைவாலி ரத்த சோகையை தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
➥குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். இதனை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
➥தக்காளி, சீரகம், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து, புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
News August 26, 2025
வாலாட்டி.. அன்பின் வழிகாட்டி! இன்று சர்வதேச நாய்கள் தினம்!

நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2004-ம் ஆண்டு முதல் சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்ற நண்பனாக இருப்பது இந்த நாலு கால் ஜீவன்தான். தனிமையில் வாடுபவர்களுக்கு இவர்கள் ஒரு நல்ல கம்பேனியன். தற்போது நாய்கள் குறித்த சர்ச்சைகள் இருப்பினும், அவை முற்றிலும் வெறுக்கப்பட வேண்டிய ஜீவன்கள் அல்லவே!