News June 26, 2024
ஷாருக் கானுடன் ஜோடி சேரும் சமந்தா

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைத் தொடர்ந்து சமந்தாவும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.
ஷாருக் கான் ஜோடியாக புதிய இந்தி படத்தில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசபக்தியை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்தை, ராஜ்குமார் ஹிரானி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 12, 2025
நாட்டின் டாப் 2 Dirtiest ரயில்வே ஸ்டேஷன் சென்னைல தான்!

மிகவும் அசுத்தமாக இருக்கும் ரயில்வே நிலையங்கள் என்றால், நம்மில் பலரும் ஏதோ வட மாநிலங்களில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அது உண்மையில்லை. Quality Council of India (QCI) நடத்திய சர்வே உங்களை அதிர வைக்கலாம். ஆம், முதல் இரு இடங்களில் இருப்பது சென்னையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் தான். எந்த ஸ்டேஷன்கள் என்பதை அறிய, Photo-வை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.
News December 12, 2025
EX மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

Ex மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல்(90) வயது மூப்பு காரணமாக காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 7 முறை MP-யாகவும், 2 முறை MLA-வாகவும் பணியாற்றியுள்ளார். 1991-1996 வரை லோக்சபா சபாநாயகராக இருந்த இவர், 2004-ல் மத்திய உள்துறை அமைச்சரானார். 2008 மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்த சிவராஜ், 2010- 2015 வரை பஞ்சாப் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.
News December 12, 2025
BREAKING: விஜய் கட்சியின் சின்னம் உறுதியானது

தவெகவுக்கு ‘மோதிரம்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை கேட்டு தவெக ECI-ல் மனு கொடுத்திருந்தது. இந்நிலையில், மோதிரம் சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவிக்க உள்ளார். 2014, 2016 தேர்தல்களில் விசிக மோதிரம் சின்னத்தில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


