News June 14, 2024

இந்தி படம், வெப் தொடரில் இருந்து சமந்தா விலகல்

image

மயோசிடிஸ் தோள் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில மாதங்கள் நடிக்காமல் இருந்தார். பிறகு குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்த அவர், இந்திப்படம் ஒன்றிலும், வெப் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், சாப்பிட்ட மாத்திரையால் மீண்டும் அலர்ஜி ஏற்பட்டதாகவும், இதனால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவற்றில் இருந்து சமந்தா விலகி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 4, 2026

மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

image

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

image

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.

News March 4, 2026

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு.. பாமகவுக்கு 1 சீட்

image

ராஜ்யசபா அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுவார் என EPS அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாளையுடன் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், <<19299051>>திமுக<<>>, அதிமுக அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

error: Content is protected !!