News September 26, 2025
₹30 லட்சம் வாட்ச் உடன் சமந்தா PHOTOS

நடிகை சமந்தா அழகு மட்டுமல்ல திறமை, உழைப்பு என ரசிகர்களை கவர்ந்தவர். சமந்தா, உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் போராடி, தனது பயணத்தை தைரியமாக தொடர்ந்து வருகிறார். தன்னைப் போன்று பல பெண்களுக்கு முன்மாதிரியாக உள்ளார். பியாஜெட்டின் ஜுவல்லரி வாட்ச் அணிந்து போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இவர் அணிந்திருக்கும் வாட்ச்-யின் விலை ₹30 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த போட்டோஸ் பிடித்திருந்தா லைக் போடுங்க.
Similar News
News January 2, 2026
அதிமுக விருப்ப மனு மூலம் ₹15.26 கோடி

2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு ஒன்றிற்கு ₹15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், விருப்ப மனுக்கள் மூலம் அதிமுகவுக்கு ₹15.26 கோடி (15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) கிடைத்துள்ளது. குறிப்பாக, EPS போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டதன் மூலம் 3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது.
News January 2, 2026
பொங்கல் பரிசு.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை & 1 முழு கரும்பை உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பை வழங்க ₹248 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இதில் ரொக்கப் பரிசு தொடர்பான தகவல்கள் இடம்பெறாததால், பரிசுத் தொகை கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பரிசுத் தொகை அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என கூறப்படுகிறது.
News January 2, 2026
TNPSC 2026 சிலபஸில் மாற்றமில்லை

நடப்பாண்டிற்கான TNPSC தேர்வுகள், தேர்தலுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்திலிருந்தே தொடங்குகின்றன. இதற்காக தேர்வர்கள் தயாராகிவரும் நிலையில், பாடத்திட்டம் (syllabus) மாறுமோ என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடப்பாண்டிற்கான போட்டித் தேர்வுகள் நடக்கும் என TNPSC தலைவர் SK பிரபாகர் தெரிவித்துள்ளார். எனவே, தேர்வர்கள், தாங்கள் எழுதும் தேர்வுகளுக்கு ஏற்றார்போல் படிக்க தொடங்கலாம்.


