News March 25, 2024
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா

சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. சண்டை காட்சிகளில் கஷ்டப்பட்டே நடித்தேன். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News July 11, 2025
SK கொடுத்த ஷாக்!

‘குட் நைட்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சந்திரசேகரன் அடுத்து SK படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு SK பிரேக் போட்டுள்ளாராம். ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவருக்கு கதை சொல்ல, அதில் பயங்கர இம்ப்ரஸான SK, அந்த படத்தை முதலில் தொடங்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
News July 11, 2025
மதிமுகவில் ஓயாத மோதல் (1/2)

மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்ததும் அறிந்ததே. அதன்பிறகு 2 பேர் இடையேயான கருத்து வேறுபாடு குறையவில்லை எனவும், 2 பேரின் ஆதரவாளர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் இனி சமாதானம் செய்ய முடியாது என வைகோவும் புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
News July 11, 2025
மதிமுகவில் ஓயாத மோதல் (2/2)

கடந்த 4 நாள்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளை அழைத்த வைகோ, இனிமேல் பேனர்கள், விளம்பரங்களில் மல்லை சத்யா படம், பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்தே பேட்டியில் மல்லை சத்யா குறித்த அதிருப்தியை வைகோ வெளிப்படுத்தியதாகவும், பதிலுக்கு சத்யாவும் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது