News October 21, 2025

புதுவீட்டில் தீபாவளியை கொண்டாடிய சமந்தா

image

கியூட் ரியாக்‌ஷன்களில் நம்மை கொள்ளைகொள்ளும் சமந்தா, தீபாவளியை கோலகலமாக கொண்டாடியுள்ளார். மும்பையில் புதிதாக அபார்ட்மெண்ட் வாங்கி செட்டிலான அவர், அங்கு தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோஸ் உடன், தனது வீட்டின் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.

Similar News

News October 21, 2025

முதல்முறை முதலீட்டாளர்களே.. நல்ல நேரம் இதுதான்

image

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு வேகமாக வளரும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். விடுமுறை தினமான இன்று மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில் மட்டும் இயங்கும் பங்குச்சந்தையில், உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். நாளையும் (அக்.22) பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை இயங்கும்.

News October 21, 2025

காய்ச்சலை விரட்ட இந்த கசாயத்தை குடிங்க!

image

மழைக்காலம் வந்தாலே வயது வித்தியாசமின்றி, பலரையும் காய்ச்சல் வாட்டி வதைக்கிறது. அதிலிருந்து நிவாரணம் பெற, இந்த கசாயத்தை குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டினால் கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதில் தேன் சேர்த்து காலை, மாலை, இரவு என காய்ச்சல் குணமாகும்வரை குடிக்கலாம்.

News October 21, 2025

2026 தேர்தல்.. CM ஸ்டாலின் புதிய திட்டம்

image

சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். சில மாவட்டங்களில் நிலவும் உள்கட்சி பிரச்னைகளை தீர்க்கவும் பொறுப்பு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையில் சிக்கினால் உடனடியாக அவர்களை நீக்கிவிடுவேன் எனவும் வார்னிங் கொடுத்துள்ளாராம்.

error: Content is protected !!