News April 24, 2024

சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

image

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காகப் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாகச் செலுத்துமாறு PBKS அணியின் கேப்டன் சாம் கர்ரனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. நடுவரின் முடிவில் வேறுபாடு காட்டியதை அடுத்து, நடத்தை விதிகள் பிரிவு 2.8 இன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக கர்ரனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அபராதத்தைக் கட்ட ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 9, மார்கழி 25 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News January 9, 2026

‘பராசக்தி’ நாளை வருவது உறுதி

image

‘ஜனநாயகன்’ போல் ‘பராசக்தி’ படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் படம் திட்டமிட்டபடி நாளை திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. சென்சாரில் சொல்லப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

News January 9, 2026

அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்க?

image

எப்போதாவது நெட்டி முறித்தால் பிரச்னை இல்லை. ஆனால் அடிக்கடி நெட்டி முறிப்பதால் சில பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், 45 வயதை கடந்தவர்கள் அடிக்கடி நெட்டி முறித்தால், முழங்கால் வீக்கம், தசைநார் பிடிப்பு, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு கைகளை அவ்வப்போது உட்படுத்துவது அவசியம்.

error: Content is protected !!