News August 6, 2025

பாலிவுட்டுக்கு செல்லும் சாம் சி.எஸ்

image

விக்ரம் வேதா, டிமாண்டி காலனி-2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் சாம் C.S. இவர் தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பாலிவுட்டில் ஒரு படத்துக்கு அவர் இசையமைக்க உள்ளாராம். இத்தகவலை அவர் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Similar News

News August 7, 2025

சூது செய்து பாமகவை பறிக்க துடிக்கும் அன்புமணி: ராமதாஸ்

image

அன்புமணி வஞ்சனையாலும் சூது செய்தும் பாமகவை பறிக்க முயல்வதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகிவிட்டதால், நானே தலைவர் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், கூட்டணி முடிவால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறிய அவர், பொய்களையும், கட்டுக்கதைகளையும் கூறி ஐயா ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்துவிட்டார் என்று ஆதங்கப்பட்டார்.

News August 7, 2025

Way2News வினாடி வினா கேள்வி பதில்கள்..

image

1. குட்டி சிங்கத்தின் பெயர் என்ன?
2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
3. உயிரினங்கள் சுவாசிக்க என்ன வாயு தேவை?
4. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தளபதி யார்?
5.உலகின் மிகச்சிறிய பறவை எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
பதில்கள் Way2News-ல் மதியம் 12:30 மணிக்கு வெளியாகும்.

News August 7, 2025

திருமணமாகாதவர்களுக்கு ₹1.5 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் 350 Technical காலியிடங்களை(Short Service) நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21-27 வயதுக்குட்பட்ட என்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கிய கண்டிஷன் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். பதவிக்கேற்ப மாதம் ₹56,000- ₹1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!