News March 22, 2025
சரவெடியாய் வெடித்த சால்ட்.. அதிரடி காட்டும் RCB!

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வெளுத்து வாங்கினர். பவர்பிளே முழுவதும் பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்தன. அதிரடியாக விளையாடிய சால்ட், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவர்பிளேயில் மட்டும் பெங்களூரு அணி 80 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
Similar News
News July 9, 2025
Bharat Bandh: அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் என்ன?

*மத்திய அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும். *தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ₹26,000 வழங்க வேண்டும். *பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். *பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. *100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியை ₹600 ஆக உயர்த்த வேண்டும். *பெட்ரோல், டீசல் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பந்த் நடத்துகிறது.
News July 9, 2025
தமிழக அரசியலில் புதிய பெண் தலைவர்.. பாமகவில் திருப்பம்!

அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி களமிறக்கப்பட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்துதான் அன்புமணி சண்டையை தொடங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வரவுள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
News July 9, 2025
இந்தியாவுக்கு கூடுதலாக 10% வரிவிதிப்பு: டிரம்ப்

இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.