News March 27, 2025

கண்ணை பறிக்கும் சல்மான் கான் வாட்ச்.. விலை ₹61 லட்சமா?

image

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கையில் கட்டியுள்ள வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராம் ஜென்மபூமி பிரத்யேக எடிசன் வாட்ச்சான இதன் விலை ₹61 லட்சம். Jacob & Co என்ற பிரபலமான வாட்ச் பிராண்ட் இதனை வடிவமைத்துள்ளது.

Similar News

News November 15, 2025

மகளிர் உரிமைத்தொகை ₹2000ஆக உயர்வா?

image

பிஹாரில் மகளிருக்கு ₹10,000 வழங்கப்படும் என்ற NDA அறிவிப்புதான், இண்டியா கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்று 2026 தேர்தலின்போதும் NDA கூட்டணியில் இருக்கும் அதிமுக முக்கிய அறிவிப்பை வெளியிடலாம். இதனால், ஆளும் திமுக, தேர்தலுக்கு முன்பாக பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை ₹2000-ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

News November 15, 2025

அடுத்த பிஹார் CM இவரா?

image

பிஹாரில் நிதிஷ் தலைமையில் தேர்தலை சந்தித்த NDA கூட்டணி இமாலய வெற்றி கண்டுள்ளது. இதனையடுத்து, பிஹார் CM யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, சாம்ராட் சௌத்ரியின் பெயரை பாஜக உத்தேச பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் தற்போது அங்கு DCM ஆகவும் உள்ளார். ஜேடியுவை(85) விட பாஜக(89) அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அவர்கள் கைகாட்டும் நபரே CM ஆகலாம் என பேசப்படுகிறது.

News November 15, 2025

1,429 பணியிடங்கள்.. நாளையே கடைசி: APPLY

image

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவுகளோடு +2 தேர்ச்சி. வயது வரம்பு: 18+. சம்பளம்: ₹19,500 – ₹71,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!