News October 23, 2025

மின்சார கார்களின் விற்பனை அமோகம்

image

கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின்சார கார்களின் மொத்த விற்பனை 6,216-ல் இருந்து 15,329-ஆக அதிகரித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 62% அதிகரித்து 6,216 கார்கள் விற்றுள்ளன. அதேபோல் JSW MG MOTORS 3,912, மஹிந்திரா நிறுவனம் 3,243, BYD இந்தியா 547, கியா இந்தியா 506, ஹிண்டாய் மோட்டார் 349, BMW இந்தியா 310, பென்ஸ் இந்தியா 97 கார்களையும் விற்பனை செய்துள்ளன.

Similar News

News October 23, 2025

World சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த நாள்களில் சுமார் 450 டாலர்கள் சரிவை சந்தித்துள்ளது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ் தங்கம் மேலும் 91(₹7,991) டாலர்கள் வரை(2.22%) குறைந்து 4,032 -க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றும் நம்மூரில் தங்கம் விலை சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 23, 2025

கரூர் வழக்கில் 2 IPS அதிகாரிகள் நியமனம்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் CBI விசாரணையை மேற்பார்வை செய்யும் குழுவுக்கு 2 IPS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையில் ஐஜியாக பணிபுரியும் சுமித் சரண், டெல்லியில் ரிசர்வ் போலீஸ் படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு IPS அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமித் சரண் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும், சோனல் மிஸ்ரா திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரியில் பணியாற்றியுள்ளனர்.

News October 23, 2025

மழை காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

image

✱தேவை: வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கண்டந்திப்பிலி, மல்லி விதைகள், சீரகம், மிளகு, திராட்சை, மஞ்சள் தூள், சுக்குப்பொடி, வெற்றிலை ✱உலர் திராட்சையை நீரில் ஊறவைக்கவும். வெற்றிலை, கற்பூரவல்லி தனியா, மிளகு, கண்டந்திப்பிலி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்குப்பொடியுடன் திராட்சையை சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். SHARE IT.​

error: Content is protected !!