News April 25, 2024
இந்தியாவில் சேலம் 3ஆவது இடம்

அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தை (42.3 டிகிரி செல்சியஸ்) சேலம் பிடித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் முதலிடமும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 2ஆவது இடமும் பிடித்துள்ளன. சேலத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நேற்று கரூர் 3வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 18, 2026
வங்கி கஸ்டமர்களுக்கு HAPPY NEWS

ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் RBI புதிய விதிகளின்படி, வங்கியால் ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு ₹30 லட்சம் வரை இழப்பீடு வழங்க, வங்கி குறைதீர்ப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மன உளைச்சல், நேர விரயத்திற்காக கூடுதலாக ₹3 லட்சம் வரை பெற முடியும். புகார்களை சரிபார்க்க மத்திய ரசீது மற்றும் செயலாக்க மையம் நிறுவப்பட உள்ள நிலையில், <
News January 18, 2026
ஒரு போன் எப்போது Expiry ஆகும் தெரியுமா?

செல்போனுக்கும் Expiry date இருக்கிறது. ஆனால் அதை நிறுவனங்கள் நேரடியாக சொல்வதில்லை. போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ அதுவே போனின் Expiry தேதியாகும். இவை ஃபோன் பாக்ஸில் இருக்கும். அல்லது settings -> about -> செக்யூரிட்டியில் பார்க்கலாம். இது போன் கம்பெனியை பொருத்து மாறுபடும். சில கம்பெனிகள் ஓரிரு வருடங்களும், ஐபோன்கள் 7 வருடங்கள் வரையும் அளிக்கிறது. உங்க போனின் Expiry date பாருங்க!
News January 18, 2026
கலைத்துறையில் அரசியல் தலையீடா? CM ஸ்டாலின்

2026-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கலைத்துறையில் அரசியல் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாளம், பெங்காலி படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் ₹5 லட்சம் வழங்கப்படும் எனவும் <<18887820>>பன்னாட்டு புத்தகத் திருவிழாவில்<<>> அவர் அறிவித்துள்ளார்.


