News April 1, 2025
ம.பி.யில் 19 நகரங்களில் மது விற்பனைக்கு தடை

ம.பி.யில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள 19 நகரங்களில் மது விற்பனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் உள்ளிட்ட 19 நகரங்களில் மது விற்பனைக்கு ஏப்.1 முதல் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நகரங்கள் அனைத்தும் புனிதமானவை, அவை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த முடிவு எடுக்க காரணம் என CM மோகன் யாதவ் கூறியுள்ளார்.
Similar News
News October 31, 2025
உங்கள் குழந்தை மண் சாப்பிடுதா? இதான் காரணம்!

கையில் கிடைப்பதை வாயில் போடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்கும். அப்படி வாயில் போடும் பொருளில் சுவை இல்லை என தெரிந்தால் அதனை மீண்டும் செய்யாது. ஆனால் சில குழந்தைகள் மட்டும் மண், சாம்பலை அடிக்கடி உண்ணும். அப்படி செய்தால், உங்கள் குழந்தைக்கு வயிற்றில் பூச்சி தொல்லை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. உடனடியாக டாக்டரை அணுகுங்கள். குழந்தைகளை காக்கும், SHARE THIS.
News October 31, 2025
Sports Roundup: பதக்க மழையில் இந்தியா

*ஆசிய யூத் கேம்ஸில் 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் இந்தியா 6-வது இடம். *தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா A 234 ரன்களுக்கு ஆல் அவுட். *ஹைலோ ஓபன் ஆடவர் காலிறுதியில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி தோல்வி. *மகளிர் பிரிவில் உன்னதி ஹூடா அரையிறுதிக்கு முன்னேற்றம். *வங்கதேசத்திற்கு எதிரான 3-வது டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
News October 31, 2025
வேலையை சுறுசுறுப்பாக்க உதவும் ஷார்ட்கட்ஸ்

கணினியில், பல செயல்களை மவுஸ்‑கிளிக்குகள் இல்லாமல், ஷார்ட்கட் மூலம் செய்யலாம். இவை, நமது வேலையை சுறுசுறுப்பாக செய்ய உதவும். ஷார்ட்கட் மூலம் ஒரு செயல்பாட்டை, எளிதாக செய்து முடிக்கலாம். மவுஸில் இருக்கும் கையை மட்டுமே நகர்த்திக் கொண்டிருந்தால், சலிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த சலிப்பை தவிர்க்க உதவும் சில ஷார்ட்கட்டுகளை, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.


