News March 17, 2024
இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.
News November 1, 2025
ஏன் அர்ஷ்தீப் சிங் இல்லை.. விளாசிய அஸ்வின்

Experiment செய்ய வேண்டும் என்றால், பும்ராவை நீக்கிவிட்டு அணியில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாமே என அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பும்ரா விளையாடினாலும், பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் இருக்க வேண்டும் என தெரிவித்த அஸ்வின், T20-யில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பது புரியவில்லை எனவும் கூறினார். அர்ஷ்தீப் சிங் அடுத்த மேட்ச்சில் விளையாடணுமா?
News November 1, 2025
3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


