News April 10, 2025
78,800 வரை சம்பளம்: மத்திய அரசில் 558 காலியிடங்கள்!

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) 558 ஸ்பெஷலிஸ்ட் கிரேட் II பதவிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, சம்மந்தப்பட்ட மருத்துவ துறையில் முதுகலை டிகிரி முடித்து, 5 வருட அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும். மாதம் ₹67,000 – ₹78,800 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News April 18, 2025
ஒரு கிராம் ₹9,000-ஐ நெருங்கிய தங்கம்!

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்.18) கிராமுக்கு₹25 உயர்ந்ததால் 1 கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் ₹8,510-க்கு விற்பனையான நிலையில், 18 நாள்களில் கிராமுக்கு ₹435 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 18, 2025
ஆன்மிக சுற்றுலாவுக்கு ₹1 லட்சம் மானியம்!

இமயமலை மானசரோவர் யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த ₹50,000 மானியம் இனி ₹1 லட்சமாக உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதே போல், நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம் ₹20,000–த்தில் இருந்து ₹30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
News April 18, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்து ₹71,560-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.18) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..