News March 10, 2025
வங்கியில் ₹51,000 வரை சம்பளம்… டிகிரி போதும்!

IDBI வங்கியில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 20 – 25 வயதிற்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்து, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையுடன் PG Diploma பயிற்சி அளிக்கப்படும். சம்பளம் மாதம் ₹51,000 வரை வழங்கப்படும். வரும் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News July 9, 2025
எங்கள் விமானங்கள் பாதுகாப்பானவை: ஏர் இந்தியா

அண்மையில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான தங்களின் போயிங் 787 டிரீம்லைனர் மாடல் விமானங்கள் பாதுகாப்பானவை தான் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழு முன்பாக ஏர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதை தெரிவித்தனர். இந்த வகை விமானங்கள் ஆயிரக்கணக்கான முறை பாதுகாப்பான சேவை அளித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அலுவல்பூர்வமான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
News July 9, 2025
நாளை பாரத் பந்த்: இதெல்லாம் பாதிக்கப்படலாம்

நாளை நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தால் பின்வரும் சேவைகள் பாதிக்கப்படலாம்: *பொதுத்துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் *தபால்துறை சேவைகள் *சுரங்கங்கள் & தொழிற்சாலைகள் *சில மாநிலங்களில் போக்குவரத்து சேவைகள் *நெடுஞ்சாலை பணிகள் *சில அரசுத்துறை அலுவலகங்கள். அதேநேரம், ஹாஸ்பிடல்கள், பார்மஸிகள், அவசர சேவைகள், விமானம் & மெட்ரோ ரயில் சேவைகள், தனியார் அலுவலகங்கள் & கடைகள், பள்ளிகள் & கல்லூரிகள் செயல்படும்.
News July 9, 2025
நள்ளிரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணிவரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமாம். உங்கள் ஊரில் மழை பெய்யுதா?