News May 7, 2025
₹37,966 வரை சம்பளம்… RRB-யில் 9970 காலிப்பணியிடங்கள்

RRB-யில் இருக்கும் 9970 உதவி லோகோ பைலட் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். 10 வது தேர்ச்சி பெற்று, 18 – 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல்தகுதி மற்றும் கணினி வழி தேர்வு நடைபெறும். குறைந்தபட்ச சம்பளமாக, இதர சலுகைகளுடன் 19,900 – ₹37,966 வரை வழங்கப்படும். இதற்கு வரும் மே 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News November 15, 2025
பிஹாரில் 200+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி BJP 89, JD(U) 85, LJP (ராம் விலாஸ்) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. MGB கூட்டணியில் RJD 24, காங்கிரஸ் 6 இடங்களை கைப்பற்றியுள்ளன. ஓவைசியின் AIMIM 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை.
News November 15, 2025
நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?
News November 15, 2025
ராசி பலன்கள் (15.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


