News November 10, 2024
உதவி இயக்குநர்களுக்கு ஊதியம் பத்தாது: சாய் பல்லவி

கோலிவுட்டில் உதவி இயக்குநர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை என சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட்-கோலிவுட் இடையிலான வித்தியாசம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது கோலிவுட் உதவி இயக்குநர்கள் கடின உழைப்பாளிகளாகவும், திறமையானவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், போதிய ஊதியம் அவர்களுக்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது என்றார்.
Similar News
News December 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 543 ▶குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். ▶பொருள்: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
News December 8, 2025
ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், ‘நுஸுக்’ அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அட்டை வடிவிலும் வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும் யாத்ரீகர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 8, 2025
எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயமா? நயினார்

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்தபட்சம் 100 நாள்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே செய்தீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 40 நாள்கள் கூட சட்டசபை நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என விளம்பர நாடகங்களை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து சட்டசபையை சரிவர கூட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


