News August 24, 2025
₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள் அறிவிப்பு!

Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 30. தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித்திறன். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News August 24, 2025
தமிழக பயணம் திடீர் ரத்து; குஜராத் செல்லும் PM மோடி

PM மோடி வரும் 26-ம் தேதி தமிழகம் வரவிருந்த நிலையில், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்லும் அவர், ₹5,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், ரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் ₹1,400 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதோடு, பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார்.
News August 24, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

+1 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை (ஆக.25) பிற்பகல் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். SHARE IT.
News August 24, 2025
Exclusive போட்டோஸ்.. ₹3.5 லட்சம் சம்பாதிக்கும் தர்ஷா குப்தா

ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டிய தர்ஷா குப்தா, முழுநேர இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சராக மாறிவிட்டார். தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில், தனது Exclusive ஆன போட்டோக்களை பார்ப்பதற்காக மாத Subscription ₹440 வசூலிக்கிறாராம். தற்போது 800 பேருக்கு மேல் Subscription செய்துள்ளதை கணக்கிட்டால், மாதம் இதன் மூலம் மட்டுமே ₹3.5 லட்சம் சம்பாதிக்கிறாராம்.