News October 26, 2025
₹40,000 சம்பளம்.. மத்திய அரசில் 340 காலியிடங்கள்!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree ✦வயது: 21- 25 ✦தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு & நேர்காணல் ✦சம்பளம்: ₹40,000- ₹1,40,000 வரை ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14-ம் தேதி. முழு தகவலுக்கு <
Similar News
News October 26, 2025
தமிழ்நாட்டில் SIR: நாளை அறிவிப்பு?

டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 26, 2025
என்னது..ஈபிள் டவர் வளருமா!

பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் வெயில் காலத்தில் 15 செ.மீ., வரை வளரும் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், வெப்பம் அதிகரிக்கும்போது இதில் உள்ள இரும்பு உலோகம், சிறிதளவு விரிவடைந்து, குளிர்காலம் வரும்போது சுருங்குகிறது. இதனால் இதன் உயரம் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தின் போது அதிகமாவதாக சொல்கின்றனர். தற்போது இதன் உயரம் 1083 அடியாக இருக்கிறது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News October 26, 2025
❤️❤️ 20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!


