News December 6, 2024
₹300,00,00,000 சம்பளம்! விஜய்யை மிஞ்சிய நடிகர் யார் தெரியுமா?

‘புஷ்பா 2’ படத்திற்காக நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் உங்கள் புருவத்தை உயர்த்தும். விஜய்யின் சாதனையை முறியடித்து, இந்திய நடிகர்களிலேயே அதிகமாக, அல்லு அர்ஜுன் ₹300 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் ₹15 கோடியும், ரஷ்மிகா ₹10 கோடி, பகத் ஃபாசில் ₹8 கோடி, தேவி ஸ்ரீபிரசாத் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய ஸ்ரீலீலாவுக்கு ₹2 கோடி சம்பளமாம்.
Similar News
News October 29, 2025
மறைந்தும்.. மறையாத ‘கவிஞர் வாலி’

கருத்தாழமிக்க எளிய தமிழ் சொற்களை பாடல்களில் அமைத்து, அழியா புகழ் பெற்ற கவிஞர் வாலிக்கு இன்று பிறந்தநாள். சினிமா பாடல்களில் அவரின் முத்திரை இல்லாத இடமே இல்லை எனலாம். ‘மின்வெட்டு நாளில் இங்கு, மின்சாரம் போல வந்தாயே’ என்ற வரிகளை எழுதிய போது வாலிக்கு வயது 81. அவருக்குள் காதலும், எழுத்தும் கொஞ்சமும் குறையவில்லை என்பதற்கு இந்த வரிகள் சிறந்த எடுத்துகாட்டு. வாலியின் வரிகளில் உங்களை கவர்ந்தது எது?
News October 29, 2025
உலகின் மிகவும் விலையுயர்ந்த Handbag கலெக்ஷன்!

ஆடம்பரம் என்பது வெறும் டிசைனர் ஆடைகளை அணிவதோ ஆடம்பரமான காரை வைத்திருப்பதோ மட்டுமல்ல. Handbag-களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. அப்படி, உலகின் மிகவும் விலையுயர்ந்த டாப் 6 Handbag-களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என அறிய, போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இவற்றின் விலைக்கு சென்னையில் ஒரு வீடே வாங்கிவிடலாம், ஆனால் பணக்காரர்கள் கையில் தொங்கவிட்டபடி செல்வார்கள்.
News October 29, 2025
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார்

OPS அணியின் மாநில மருத்துவ அணி செயலாளர் Dr.கிருத்திகா, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். NDA கூட்டணியிலிருந்து விலகிய பிறகு OPS தனது அரசியல் முடிவு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், அவரது அணியை சேர்ந்த பலரும் அதிமுக, திமுக, பாஜக என பல கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.


