News April 2, 2025

1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

image

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.

Similar News

News February 7, 2026

தமிழக தேர்தல் தேதி.. முக்கிய தகவல் வெளியானது

image

TN-ல் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (பிப்.11) ECI துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வரவுள்ளார். தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களே, ரெடியா!

News February 7, 2026

காங்கிரஸ் வேண்டாம்.. விஜய்க்கு சீமானின் அட்வைஸ்

image

காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தான் முன்பு நேரில் சந்தித்தபோது விஜய்யிடம் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸை சேர்த்துக்கொள்ளலாமா என விஜய் கேட்டபோது, அவர்களை வைத்துக்கொண்டு எந்த அரசியலை பேச முடியும் என தான் கேள்வியெழுப்பிதாக சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம், GST, நீட் என எல்லாவற்றையும் புகுத்தியதே காங்கிரஸ்தான் என விஜய்யிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 7, 2026

Starlink killer.. சீனாவின் புது ஆயுதம்

image

சீனா தரையிலிருந்து செயற்கைக்கோள்களை செயலிழக்க செய்யும் மைக்ரோவேவ் அமைப்பை உருவாக்கியுள்ளது. எலான் மஸ்க்கின் Starlink செயற்கைக்கோள்கள் சீனாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், அதை செயலிழக்க செய்ய Starlink killer-ஐ உருவாக்கியுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. ஜிகாவாட் அளவில் சக்தியை உருவாக்கும் இந்த மைக்ரோவேவ், செயற்கைக்கோள்களை குறிவைத்து செயலிழக்க செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!