News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.
Similar News
News December 26, 2025
₹1000 கோடி வசூலித்து ‘துரந்தர்’ சாதனை

ஹிந்தி திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளது துரந்தர். இந்த படம் இதுவரை ₹1006.7 கோடி வசூலித்து, இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதன் 2-ம் பாகம் 2026, மார்ச் 19-ல் வெளியாகவுள்ளது.
News December 26, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹10,000.. உடனே விண்ணப்பிக்கவும்!

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (டிச.26) நிறைவடைகிறது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், உடனே விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News December 26, 2025
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கனடாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி, Toronto Scarborough பல்கலை.,-க்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவஸ்தியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இந்த ஆண்டின் 41-வது கொலை சம்பவம் இது என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


