News April 22, 2025
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. வெளியான புது தகவல்

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு DA உயர்த்தி அறிவித்த பின்னர் மாநில அரசுகளும் உயர்த்துவது வழக்கம். 2% DA உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் <<16165541>>மே மாதம்<<>> அரியருடன் வழங்கப்படவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் DA-வை உயர்த்தியுள்ளன. ஆனால், TN அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 2026 தேர்தலை மனதில் வைத்து 3% அல்லது அதற்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 22, 2025
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதா RR? எழும் குற்றச்சாட்டு

ஏப்ரல் 19 அன்று LSG – RR அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாக, ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உடனடி விசாரணை வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். LSG-க்கு எதிரான போட்டியில், RR-க்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ரன்களில் அந்த அணி தோற்றது.
News April 22, 2025
எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் இபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினர். நயினார் பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். இபிஎஸ்-ன் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News April 22, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் <<16177046>>இன்று (ஏப்.22)<<>> ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. பின்னர் முதல் வாரத்தில் சற்று இறக்கத்தைக் கண்டு அதன் பின்னர் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், இந்த மாதத்தில் மட்டும் (22 நாள்களில்) சவரனுக்கு ₹6,240 உயர்வைக் கண்டுள்ளது.