News April 30, 2024
இந்தியாவில் சம்பளம் அதிகரிக்கவில்லை

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 6 – 6.5% வரை இருக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வளர்ச்சி 8 – 8.5%ஆக இருக்காது எனத் தெரிவித்த அவர், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற 9 – 10% வளர்ச்சி அவசியம் என்றார். நாட்டில் வளர்ச்சி இருக்கும்போது, வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அவை அதிகரிக்கவில்லை என அவர் தெரித்தார்.
Similar News
News March 23, 2026
சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்: OPS

கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார். தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா? பொசுங்கிவிடுவார்கள்’ என்றார். மேலும், சூரியனால் தான் மனிதர்களும், உயிர்களும் வாழ முடிகிறது எனவும் அப்படிப்பட்ட சூரியனை தான் திமுகவின் சின்னமாக அண்ணா வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 23, 2026
பெற்றோரை கவனிக்காமல் விட்டால் ₹10,000 Salary Cut

பாசத்தையும், நேசத்தையும் ஊட்டி வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவல நிலை உள்ளது. இதை தடுக்க பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 15% (அ) ₹10,000 பிடித்தம் செய்து, அதை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த பட்ஜெட் தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தெலங்கான அரசு தீவிரம் காட்டுகிறது. TN-ல் இது அமலுக்கு வந்தால்..?
News March 23, 2026
BREAKING: துரந்தர் 2 படத்திற்கு தடையா?

‘துரந்தர் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், படத்தில் ஒரு சார்பான கருத்து உள்ளதாக சுட்டிக்காட்டி, படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கக் மனுவில் கோரப்பட்டுள்ளது. வெளியான 3 நாள்களில் ₹500 கோடியை வசூலித்த ‘துரந்தர் 2’ படம் பாகிஸ்தானில் உளவு பார்க்கும் இந்தியரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.


