News October 19, 2025
₹35,400 சம்பளம்; 2,570 பணியிடங்கள்; முந்துங்க!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் அக்.30 தொடங்கி நவ.30 உடன் முடிவடைகிறது. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News March 27, 2026
விஜய் – த்ரிஷா.. வைரலாகும் ஆர்த்தியின் பதிவு

ஒரு மனைவிக்கான அனுதாபம் அவரது கணவரின் மார்க்கெட் வேல்யூவை பொறுத்ததா என்று ஆர்த்தி தனது இன்ஸ்டா பதிவில் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ரவி மோகன் – கெனிஷா விவகாரம் வெடித்தபோது தனக்கு பெரிதாக ஆதரவு இல்லை, குரல்கள் எழவில்லை. ஆனால், விஜய் – சங்கீதா, த்ரிஷா விவகாரத்தில் சங்கீதாவுக்கு பேராதரவு கிடைத்தது குறித்து அவர் மறைமுகமாக இப்படி சொல்வதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News March 27, 2026
தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியானது

NDA கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை – கார்த்திகேயன், ஈரோடு மேற்கு – யுவராஜா, ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர், கும்பகோணம் – அசோக்குமார், கிள்ளியூர் – நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த 5 தொகுதிகளில் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
மோடி அழைத்தார்.. நாட்டு மக்கள் அதிர்ச்சி CLARITY

மேற்காசிய போர்ச்சூழல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து மாநில CM-களுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே, கொரோனா போன்ற சூழல் என மோடி குறிப்பிட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. ஆனால், லாக் டவுன் என்பது வதந்தியே என இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


