News October 2, 2025
₹30,000 சம்பளம்: 610 பணியிடங்கள் அறிவிப்பு

பெங்களூரு BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள 610 பொறியியல் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc. வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: 3 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் ₹30,000 – ₹40,000. இதுதவிர ₹12,000 மருத்துவம் உள்பட இதர செலவுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.7. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 2, 2025
Recipe: கேரளா பருப்பு பாயாசம் செய்யலாம் வாங்க!

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு கடலைப்பருப்பு மூழ்குமளவுக்கு தேங்காய் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் அதனுடன் வெல்லப்பாகு, சுக்கு பொடி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் கேரளா பருப்பு பாயாசம் ரெடி.SHARE.
News October 2, 2025
இட்லி கடை படத்தின் முதல்நாள் வசூல்

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அருண் விஜய், நித்ய மேனன், சத்யராஜ், பார்த்திபன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படம் ஒரு ஃபீல் குட் படமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியளவில் ₹10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷின் முந்தைய படமான ‘குபேரா’ முதல்நாள் ₹15 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 உயர்ந்தது

நீண்ட நாள்கள் கழித்து ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை குறையவில்லை. மாறாக வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை 1 கிராம் ₹2 உயர்ந்து ₹163-க்கும், சவரனுக்கு ₹2000 உயர்ந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாளில் வெள்ளி விலை ₹13 ஆயிரம் உயர்ந்துள்ளது.