News March 17, 2024
எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் 5 மடங்கு உயர்வு

மேற்குவங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேறிய சம்பள உயர்வு தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏக்கள் சம்பளம் ரூ.10,000ல் இருந்து ரூ.50,000ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.10,900ல் இருந்து ரூ.50,900ஆகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.51,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
இப்படித்தான் மது குடிக்க பழகினேன்: ஊர்வசி

முதல் கணவர் வீட்டுக்கு சென்ற பின் தான், குடிக்க பழகியதாக ஊர்வசி தெரிவித்துள்ளார். கணவர் வீட்டில் அனைவரும் மாடர்னாக இருந்தனர். குழந்தைகள், பெற்றோருடன் அமர்ந்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நானும் மது குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் குடிக்கு அடிமையாகி, அதில் இருந்து வெளியேற மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நடிகர் மனோஜ் கே ஜெயனை ஊர்வசி முதலில் திருமணம் செய்திருந்தார்.
News December 15, 2025
இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.


