News January 21, 2025

சயிஃப் அலிகான் வீடு திரும்பினார்

image

கத்தி குத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் அவரது முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

Similar News

News March 5, 2026

BREAKING: பள்ளிகளில் தடை.. தமிழக அரசு உத்தரவு

image

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து TN அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிவினைகளை தூண்டும் நிகழ்ச்சி, கல்வி நோக்கத்திற்கு தொடர்பில்லாத நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 5, 2026

வானதி சீனிவாசனுக்கு சீட் மறுக்கப்படுகிறதா?

image

பாஜகவில் சிட்டிங் MLA உள்பட முக்கியமான சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளைஞர்கள் & புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 5, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

image

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!