News October 12, 2025
சாய் சுதர்சன் காயம்: அப்டேட் கொடுத்த பிசிசிஐ

வெஸ்ட் இன்டீஸின் முதல் இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல்லின் கேட்ச்சை பிடித்த போது சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. வலியில் துடித்த அவரை உடனடியாக மருத்துவ குழு அழைத்து சென்றது. மூன்றாம் நாளான இன்றும் அவர் பீல்டிங் செய்யாததால் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
அரசன் படத்தின் புதிய அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக். 17-ம் தேதி காலை 10.07-க்கு யூடியூபில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.16-ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வெற்றிமாறன், சிம்புவுடன் இசையமைப்பாளர் அனிருத் முதல்முறையாக கைகோர்க்கிறார்.
News October 12, 2025
தீபாவளிக்கு முன் வீட்டிலிருந்து அகற்ற வேண்டியவை

தீபாவளி பண்டிகை மக்களின் வாழ்க்கையிலும், மனதிலும் ஒளியை கொண்டு வரும் பண்டிகை. இந்த திருநாளின் போது லட்சுமிதேவி நமது வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. அச்சமயம் நம் வீட்டிலிருந்து சில பொருள்களை அகற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி உடைந்த கண்ணாடிப் பொருட்கள், பழைய செருப்புகள், துணிகள், உடைந்த (அ) நின்று போன கடிகாரங்கள், உடைந்த கடவுள் சிலைகள் ஆகிவை வீட்டில் இருக்க கூடாதாம்.
News October 12, 2025
சற்றுமுன்: உலகை விட்டு மறைந்தார்

ரஜினி, கமலின் பல வெற்றிப் படங்களுக்கு கேமராமேனாக முத்திரை பதித்த பாபு(88), சில படங்களிலும் நடித்துள்ளார். மாரடைப்பால் நேற்று அவர் உயிர்பிரிந்தது. சென்னையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரைபிரபலங்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தபின், பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. RIP