News June 26, 2024
மீண்டும் சர்ரே அணிக்காக ஆடவுள்ள சாய் சுதர்சன்

இந்திய அணியின் வீரர் சாய் சுதர்சன் மீண்டும் சர்ரே அணிக்காக நடப்பு கவுன்ட்டி சாம்பியன்ஷிப் சீசனில் சில போட்டிகளில் விளையாட உள்ளார். சென்னையைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான அவர், கடந்த சீசனில் (2023) சர்ரே அணிக்காக இங்கிலாந்தில் நடந்த இரு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் அந்த அணி 22ஆவது முறை சாம்பியன் பட்டம் வெல்ல பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
புரட்டாசி மாதத்தின் சிறப்பான பெருமாள் வழிபாடு!

அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டிலுள்ள பெருமாள் படத்திற்கு, வடை மாலை சாற்றி, நைவேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டலை படைக்கலாம். மாவிளக்கு போட வேண்டும். தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு, ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE.
News September 18, 2025
‘புலி’ டைரக்டருடன் இணையும் விமல்

இயக்குநர் சிம்புதேவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஃபைனான்சியருடன் இணைந்து சிம்புதேவனே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக, இயக்கிய ‘போட்’ தோல்வியடைந்ததால், பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற சிம்புதேவனின் ஆசை பாழான நிலையில், தற்போது விமல் இணைந்துள்ளார்.
News September 18, 2025
உலகின் உயரமான Top 10 கட்டடங்கள்!

பொதுவாக உயரமான கட்டடங்களை பார்க்கும் போது எப்போதுமே வியப்பாகத்தான் இருக்கும். வானை எட்டும் உயரத்துக்கு இருக்கிறதே, எப்படி கட்டியிருப்பார்கள் என்றெல்லாம் மலைத்து நின்று இருப்போம். உலகின் உயரமான டாப் 10 உயரமான கட்டடங்களின் போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களை கவர்ந்தது எது என்பதை கமெண்ட் செய்யுங்கள். லைக் செய்தும் உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள்.