News September 23, 2025
பிகினியில் கவனிக்க வைத்த சாய் பல்லவி (PHOTOS)

பிரேமம் முதல் அமரன் படம் வரை கிளாமர் இல்லாமல் நடித்ததால், சாய் பல்லவிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில், தனது தங்கை பூஜா கண்ணன் உடன் பிகினி உடையில் உள்ள பல்லவியின் போட்டோஸ் வைரலாகி எதிர்ப்புகளையும், ஆதரவையும் பெற்று வருகிறது. ‘ஆடை சுதந்திரம் அவருடையது’ எனவும், ‘சினிமா நிகழ்ச்சிகளில் ஆடை சற்று விலகினாலே உடனே அதை சரிசெய்யும் சாய் பல்லவியா இது?’ என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News September 24, 2025
திருமண வாழ்க்கை நீடிக்க இந்த 5 விஷயங்கள் போதும்

*தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
*இருவருக்குமிடையேயான காதல் மட்டும் மகிழ்ச்சியை கொடுத்திராது, உங்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
*கருத்து மோதல்கள் அதிகமாக இருப்பின், தேவையான உளவியல் ஆலோசனைகளை பெறுங்கள்.
*உங்கள் துணையாரிடம் நேர்மையாக பேசுங்கள். *துணையிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை பகிர, ஒரு நல்ல நண்பரையும் வைத்துக்கொள்ளுங்கள்.
News September 24, 2025
இந்திய வரும் மெஸ்ஸி… ஆஸி., அணியுடன் மோதுகிறார்

நவம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவுடன் நட்புறவு போட்டியில் மோதுகிறது. மெஸ்ஸியின் வருகை ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிகாரிகள் அடுத்த வாரம் கொச்சி மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் விளையாடவுள்ள மெஸ்ஸியை வரவேற்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர். Vamos Messi..
News September 24, 2025
குறட்டை விடுறீங்களா? இதய பிரச்னையா கூட இருக்கலாம்

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.