News February 9, 2025
சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

‘STR 49’ படத்தில் பெரிய காம்போ ரெடியாகி வருகிறது. காலேஜ் கதைக்களமான இதில், சிம்புவுடன் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள், ‘ஆஹா…இது யாருமே எதிர்பார்க்காத காம்போ ஆச்சே’ என குஷியில் இருக்கிறார்கள். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்க உள்ளார். சாய்பல்லவி – சிம்பு காம்போ எப்படி இருக்கும்?
Similar News
News September 9, 2025
செப்டம்பர் 9: வரலாற்றில் இன்று

*1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. *1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. *2002 – பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர். *1967 – பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பிறந்த நாள்.*1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது. *2011 – நடிகை காந்திமதி மறைந்த நாள்.
News September 9, 2025
தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
News September 9, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன. *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை.