News February 10, 2025

அட்லியின் அடுத்த படத்தில் சாய் அபயங்கர்?

image

ஆல்பம் பாடல்களின் மூலம் பெரும் வைரலாகும் சாய் அபயங்கர், ஆர்.ஜே.பாலாஜி – சூர்யா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இன்னும் முதல் படமே வெளிவராத நிலையில், அட்லியின் அடுத்த படத்திலும் அவர் கமிட்டாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் ₹400 கோடி செலவில் தயாராகும் படத்தில் சாய் இணைந்துள்ளார் எனப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வமாக செய்தியும் வெளியாகவில்லை.

Similar News

News March 4, 2026

தருமபுரி: ஓடிச் சென்று பார்த்த MP

image

தனியார் விவாத நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சேகர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி MP நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இது குறித்து திமுக கழக முன்னோடிகளுடன் கலந்தாலோசித்தார்.

News March 4, 2026

‘கேரளா ஸ்டோரி 2’ TN அரசுக்கு சீமான் எச்சரிக்கை

image

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தை TN-ல் திரையிட திமுக அரசு அனுமதித்தது வெட்கக்கேடானது என்றும், உடனடியாக தடைசெய்ய தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரித்துள்ளார். இதுபோன்ற படங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2026

தவெகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களா?

image

விஜய் அமைத்த அருண்ராஜ் தலைமையிலான குழு, தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாம். அதுபோல, முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளதாக TVK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!