News September 22, 2025
நடிகை ராதிகா வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா (86) நேற்று காலமானார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு 4 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும் மாலை 5.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
கிஸ் vs சக்தித் திருமகன்: பாக்ஸ் ஆபிசில் முந்தியது யார்?

செப்டம்பர் 19-ம் தேதி பல படங்கள் வெளியான போதிலும், ‘கிஸ்’ & ‘சக்தித் திருமகன்’ ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. 3 நாள் முடிவில், ‘கிஸ்’ படம் ₹1.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், ‘சக்தித் திருமகன்’ ₹3.79 கோடியை வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
RECIPE: சுவையான கேழ்வரகு வடை!

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு நல்லது. இதில் வடை செய்தால், அனைவரும் ரசித்து உண்பார்கள் *கேழ்வரகு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும் *இதனை பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான, ஹெல்தியான கேழ்வரகு வடை ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 22, 2025
29-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

வரும் 29-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.