News August 5, 2024
கிரிக்கெட் உலகிற்கு சோகமான செய்தி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் (55) காலமானார். கடந்த 2 வருடங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 1993இல் சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கிய அவர், 100 டெஸ்ட் போட்டிகளில் 6,744 ரன்களும், 82 ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களும் குவித்துள்ளார். தொடர்ந்து, 2002ல் ஒருநாள் மற்றும் 2005ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
Similar News
News January 20, 2026
பிக்பாஸ் திவ்யாவை பாதித்த அந்த விஷயம்

பிக்பாஸ் வெற்றியையடுத்து, தனது திருமணம் பற்றி திவ்யா கணேசன் பகிர்ந்த தகவல் SM-ல் வைரலாகிறது. தன்னுடைய Ex-காதலன் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்றும், 2018-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், திடீரென திருமணம் நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதனால் பிறரை நம்புவதற்கே பயமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
டைனோசர்களுக்கும் மூத்த நதி எது தெரியுமா?

பூமியின் பழமையான நதி எது தெரியுமா? ஆஸ்திரேலியாவின் பாலைவன பகுதியில் பாயும் Finke நதி! 30 முதல் 40 கோடி ஆண்டுகள், அதாவது டைனோசர்கள் பிறப்பதற்கு முன்பே ஓட தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மழைக்காலத்தில் மட்டும் ஆறாக ஓடும்; மற்ற நேரத்தில் குட்டைகளாக காட்சியளிக்கும். மலைகள் உருவாவதற்கு முன்பே இந்த நதி ஓடிக்கொண்டிருந்ததால், மெக்டோனல் மலைத்தொடரை நேர்க்கோட்டில் கிழித்துக் கொண்டு பாய்கிறது.
News January 20, 2026
யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன். தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் பிஹாரில் 5 முறை MLA-வாக வெற்றி கண்டார். இளம் வயதிலேயே பாஜக தேசிய தலைவரானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


