News December 5, 2024
மதுபிரியர்களுக்கு SAD NEWS

மது குடிப்பது 7 வகை கேன்சர் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆய்வு முடிவு எச்சரிக்கிறது. அதன்படி, மதுவுக்கும் கேன்சர் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் & மார்பகம் பகுதிகளில் கேன்சர் பாதிக்க வாய்ப்பு அதிகம். டெய்லி குடிச்சாலும், கொஞ்சமா தான் குடிக்கிறேன் என்று சொல்பவர்களுக்கும் கூட, இந்த எச்சரிக்கை பொருந்துமாம்.
Similar News
News April 29, 2025
இபிஎஸ் பம்மியதற்கு, மகன் மிதுனே சாட்சி: ஆர்.எஸ்.பாரதி

மாநில உரிமையை பறிக்கும் பாஜகவுடன் சேர்ந்த EPS-க்கு 2026-ல் மக்கள் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் பம்மியதற்கு, அவரது மகன் மிதுனே சாட்சி; கரப்ஷன் ஆட்சியை நடத்திய இபிஎஸ், அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், கூட்டணி ஆட்சி என்ற போதே இபிஎஸ்ஸின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக சாடினார்.
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.