News April 27, 2025
காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.
Similar News
News November 26, 2025
GK வாசனின் தமாகாவில் ஐக்கியமானது காமக

காமராஜர் மக்கள் கட்சியை(காமக), ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தமிழருவி மணியன் இணைத்துள்ளார். <<18388915>>நேற்று அரசியலில் இருந்து<<>> விலகுவதாக அறிவித்த அவர், இன்று இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். GK வாசனின், தமாக தற்போது NDA கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஏற்கெனவே, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
SIR இப்போது ஏன் தேவை? SP வேலுமணி புது விளக்கம்

வரும் தேர்தலில் EPS ஜெயிப்பது உறுதி என அதிமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் Ex அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். SIR பணிகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறிய அவர், அதிமுக எப்போதும் நேர்மையாகவே தேர்தலை சந்திக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், தேர்தல் நடக்க இன்னும் 5 மாதங்களே இருப்பதால், தற்போது இந்த SIR பணிகள் நடப்பதே சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
News November 26, 2025
சரிவில் இருந்து மீண்டு உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்று(நவ.26) உயர்வுடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 85,609 புள்ளிகளிலும், நிஃப்டி 320 புள்ளிகள் உயர்ந்து 26,205 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Reliance, HDFC Bank, JSW Steel, SBI, Bajaj Finserv உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. உங்கள் பங்குகளின் லாபம் எப்படி உள்ளது?


