News August 9, 2024
வினேஷ் போகத்துக்கு சச்சின் ஆதரவு குரல்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு
வெள்ளிப்பதக்கம் அளித்திருக்க வேண்டும் என்று, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குரல் எழுப்பியுள்ளார். போதைப்பொருள் போன்ற விவகாரங்களுக்கு முற்றிலுமாக தகுதிநீக்கம் செய்வது சரியென்றும், எடை அதிகரித்ததற்கு தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விளையாட்டுத்தீர்ப்பாயத்தில் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 11, 2026
டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க முடியாதா?

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு தர விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், ஏற்கனவே ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை வேறு எவருக்கும் மாற்றவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நார்வே நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, 8 போர்களை நிறுத்தியதற்கு தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
News January 11, 2026
நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

பிஹார் CM நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக JD(U) MP கேசி தியாகி PM மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் இதை வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப்பும் இணைந்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு கொடுத்தால் தனது தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 11, 2026
வெனிசுலாவின் எண்ணெய் காசு US கட்டுப்பாட்டில் சென்றது!

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் இருந்து ஈட்டப்படும் வருவாய், தற்போது முழுக்க முழுக்க அமெரிக்க கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்தும் அந்த நிதியை பறிமுதல் செய்ய முடியாத வகையில் முக்கிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெனிசுலாவின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


