News March 21, 2025

ஏப்.18இல் ரீ எண்ட்ரி கொடுக்கும் ‘சச்சின்’

image

விஜய் நடிப்பில் 2005இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘சச்சின்’ திரைப்படம் ஏப்.18இல் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுத்ததால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். தற்போது அவரது நடிப்பில் ‘ஜனநாயகன்’ விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அதற்குமுன் இப்படம் வெளியாக இருப்பதால், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News July 10, 2025

பட்டாவில் அதிரடி மாற்றம்… விரைவில் புதிய நடைமுறை

image

இ- பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டுவர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். SHARE IT.

News July 10, 2025

இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள்.. ஜோ ரூட் புது சாதனை

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். 93 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் இதுவரை டெஸ்டில் 3,000 ரன்கள் விளாசியது இல்லை. ஆனால் ஜோ ரூட், லார்ட்ஸ் டெஸ்டில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதில் 10 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும்.

News July 10, 2025

தமிழகத்தில் 8 இடங்களில் சதமடித்த வெயில்

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதேவேளையில், ஒருசில இடங்களில் வெப்பமும் வாட்டி வதைத்தது. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசியது. அந்தவகையில் ஈரோடு, வேலூர், நாகை, கடலூர், திருச்சி, சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!